அன்னையின் பாரம் துவாபர யுகத்தின் கடைசி நூற்றாண்டு, கலியின் சாயல் வந்துவிட்டிருந்தது. பூமாதேவிக்கு பாரம் தாங்கவில்லை. ஏன்? திடீரென்று மலைகள் வளர்ந்து விட்டனவா? ஆழிநீர் அதிகரித்து விட்டதா? உயிர்த்துளிகள் பலகோடியென்றாலும் அவை பூமியிலுள்ள ஒரு மலைக்கீடாகுமா? இல்லையாம். பூமியில் அசுரர்கள் மலிந்துவிட்டிருந்தனர். ஸாதுக்களை ஹிம்சை செய்வதும், அந்தணர்களை அவமானப்படுத்துவதும், துன்புறுத்துவதும், சக மனிதர்களிடம் கருணையின்றி நடந்து கொள்வதுமாக ஏராளமான அட்டூழியங்கள் தலைவிரித்தாடின. ஆயிரமாயிரம் ஸாதுக்கள் இருந்தாலும் பூமிமாதா மகிழ்ச்சியோடு தாங்குகிறாள் . தன் கணவனைப் பழிப்பவர்களையும், அதற்குத் துணை செல்பவர்களையும், தன் மற்ற குழந்தைகளான ஜீவர்களைத் துன்புறுத்துபவர்களையும் அவளால் தாங்கமுடிவதில்லை. தன்னை அகழ்வாரையும், இகழ்வாரையும், தன்மீது உமிழ்வாரையும் கூடத் தாங்கத்தான் செய்கிறாள். தன் கணவனான திருமாலை இகழ்பவர்களும், அவரது அடியாரைத் துன்புறுத்துபவர்களுமே அவளுக்கு பாரம். என்னதான் கணவன் என்றபோதிலும், நெறிமுறைப்படி (protocol) எதையும் செய்யவேண்டுமென்று நினைத்தளோ அல்லது அனைத்து ஜீவன்களையும் படை
Comments
Post a Comment