க்ருஷ்ணமாதுரி - 12

நகரும் மேடையின்
கவர்ச்சியில் மயங்கி
அறியாமையால் ஏறிக்கொண்டேன்..

யுகம் யுகமாய்
ஓடிக்கொண்டிருக்கிறேன்
ஒரே இடத்தில்..

ஓட்டத்தை நிறுத்தினால்
வீழ்வேன் என்று அச்சமாயிருக்கிறது..

இறங்கும் வழியோ 
மறந்துவிட்டது..

அச்சம் நீக்கி 
எனை
அள்ளிக்கொண்டு போவாயா?


Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1