Posts

Showing posts with the label நாமச்சுவை

நாமச்சுவை - 19

Image
  உயிர்கள் அனைத்தும் ஒவ்வொரு வழியில் தனக்கெனத் தேடி தளர்நடை நடக்கும். அடிக்கொரு முள்ளாய் அமைந்திட்ட ஒரு வழி குழியும் கல்லுமாய் நிரம்பிய ஒரு வழி மலர்கட்கு நடுவே முள் விரித்ததொரு வழி மலராய் மணந்து சுற்றிவிடுமோர் வழி பிறவிக் கிணற்றில் தள்ளும் பொய்வழி பொல்லா நரகம் சேர்த்திடும் கொடுவழி எத்தனை உயிரோ அத்தனை வழியாம் அவரவர் தானே தேடும்‌ வழியாம் ஆனந்தம் நிறைந்த அரச வழியுண்டு அருந்தவ ஞானியர் சென்ற வழியது குருவருள் மீதேறிப் பயணிக்கும் பெருவழி கண்ணனின் தாளிணை காட்டும் வழியது ஆண்டியும் அரசரும் அனைத்துயிர்களுமாய் ஆடிப் பாடும் எளிய வழியது நால்வகைப் பொருளும் கூட்டும் வழியது நாமம் பாடிப் பரவும் பொதுவழி எல்லா வழிகளும் முடிவது ஓரிடம் எல்லா உயிர்களும் வருவது ஓரிடம் எவ்வழி வரினும் அடைவது ஓரிடம் பயணத்தின் இனிமையும் காலமும் வேறாம்.

நாமச்சுவை... (18)

நான்  உன் பெயரின்  வழிச் செல்கிறென்.. நீ  என் வழியில் வா..   <<Previous     Back to Index

நாமச்சுவை... (17)

Image
எப்போதும் என்னோடு இருக்கிறாய்! எழும்போதே  என்னுள் இசையாகிறாய்! இதயத் துடிப்பை  உன் தாளமாக்கினாய்! வாய் திறந்தால் வார்த்தைகளுக்கு முன்னால் ஓடி வருகிறாய்! திசை தெரியாமல் தவிக்கும் நேரத்தில் சேருமிடத்தின் அரசவீதி காட்டுகிறாய்! கயவர்களின் களிப்பேச்சில் மயங்கும் நேரம் கண்ணுக்குத் தெரியாமல்  மனத்தில் கல்லென உறைகிறாய்! ஆபத்துகள் அனைத்தும் உன் வரவால் சம்பத்துகளாகின்றன.. உருவமில்லையானாலும் என்னுள் உணர்வாய்க் கலந்திருக்கிறாய்! என் இனிய இறைநாமமே! உன்னோடு வாழ்தல் இனிது! <<Previous    Next>> Back to Index

நாமச்சுவை... (16)

Image
மெல்லிய ஒலிதான் உன் பெயர்.. இனிமையானது.. நளினமானது.. அது மட்டுமா.. சொன்னதுமே அண்டத்தை  உண்டியில் கொண்ட  உனைக்  கட்டி இழுத்துவரும் வலிமையும் கொண்டது.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை..(15)

Image
உன் பெயர் சொன்னதும்.. மதகு திறந்ததும் பாய்ந்தோடி வரும் புதுப்புனலாய்  உன் கருணை.. வினைமலையைத்  தகர்ப்பதோடு.. குலம் முழுவதற்குமாய்  நிரம்புகிறது.. <<Previous    Next>> Back to Index

நாமச்சுவை..(14)

Image
விஷய விற்பனையோ வீட்டு வேலையோ அனைத்தும் உன் பெயர் சொன்னால் தானாய் நடக்கின்றன. மனம் சிலையாய் நிற்கிறது  உயிர்ச்சிலையான உனை  நினைந்து.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை..(13)

Image
உன் பெயர் படுத்தும் பாடு அளப்பரியது. அதைச்  சொல்லி சொல்லி அதுவே  இப்போது  என் பெயராகிப்போனரது.. அனைவரும்  உன் பெயரால் எனை அழைப்பதால்.. என் பெயர்? ம்ஹூம்.. நினைவில்லை.. <<Previous    Next>> Back to Index

நாமச்சுவை..(12)

Image
அலுவல் காரணமாய் உன் வீதி நடந்தேன்.. அரசல் புரசலாய்ச் செவியில் நுழைந்த உன் நாமம் எனை அள்ளிக் கொண்டுவந்து உன் ஸந்நிதியில்  போட்டது.. அனைத்தும் அறிந்த  அரி நீ.. ஆனால்,  ஏதுமறியாதவன் போல்  சிரிக்கும் உன் அன்பை  நினைத்தால் அழத்தோன்றுகிறது.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை..(11)

Image
சொல்ல சொல்ல  ஒளிரும்  உன் நாமத்தின் வெளிச்சமாகவே நீ மிளிர்கிறாய்..   <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை..(10)

Image
கோரமான  இந்த ஸம்சாரக் கடலில் மூழ்கித் தவிக்கும் நேரம்.. கைப்பிடித்து ஓடத்தில்  ஏற்றிவிட்டாய்.. இவ்வோடமோ உன் பெயர்  சொன்னால்  மட்டுமே நகர்கிறது.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை..(9)

Image
உன் பெயரைச் சொல்வது இனிதா. கேட்பது இனிதா.. நாவிற்கும், செவிக்கும்  பட்டிமன்றம் நடக்கிறது.. நடுவரான இதயமோ இரண்டுமே இனிதென்று நடுநிலையாய்த்  தீர்ப்பு சொல்லிவிட்டது.. நாவாரப் பாடி செவியாரக் கேட்பதே இனிமை..   <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை..(8)

Image
உன் பெயர் சொல்லிக்கொண்டு  செய்யப்படும்  வேலையின் பளுவை.. அவ்வொலியே சுமக்கிறது.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை..(7)

Image
உன் பெயருக்குள் ஒளிந்திருப்பது உன்  அன்பின் பேராழி.. சொல்லும்  ஒவ்வொரு முறையும் சட்டென்று  ஒரு அலை வீசி.. எனை முழுதுமாய் நனைக்கிறது... உலர விருப்பமில்லை.. இதுவே சுகம்.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை .. (6)

Image
நினைந்து நினைந்து  உருகுபவர்  ஆயிரவர்.. வழி நோக்கிக் காத்திருப்பவர்  பல்லாயிரவர்.. அனைவரும் இருக்க.. நீயோ.. பேச்சுவாக்கில்  உன் பெயர் சொன்ன என்னிடம் என்னை அழைத்தால் வருவேன்  என்று நேரில் வந்து  சொல்லிப்போகிறாய்.. இது என்ன வகையான கருணை? <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை .. (5)

Image
உன் பெயரின் ஒவ்வொரு  எழுத்திற்கும் ஒரு தனிச்சுவை உண்டு.. அனைத்தும் இணைந்த சுவையாக மதுரம்  என்றொரு தனிச்சுவையாகிறது.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை.. (4)

Image
எப்போதும் உன் பெயரைப்  பாடும் என் நாவிற்கு இதயத்துடிப்பே பக்கவாத்யமாகிப் போனது.. பாடுவது நின்றால் வாத்யமும் நிற்கும்.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை...(3)

Image
உன் பெயரைச்  சொல்லி சொல்லி  அதன் ஸ்வரங்களுக்குள்  புதைந்துபோவேன்.. அழைப்பவர்  எவராயின் என்? அவ்வொலி  உன் செவி தீண்டுவது நிச்சயம்.. அப்போது.. நானும் சேர்ந்து நுழைவேன் உன்னுள்.. <<Previous     Next>> Back to Index

நாமச்சுவை... (2)

Image
குறையற்ற  உன்  கல்யாண குணங்களைக் குறிக்கும்  பெயர்கள் கோடி.. அனைத்துமே.. அன்புச் சுரங்கம்.. என் குணங்கள் அனைத்தும் தோஷங்களே. எடுத்த  எண்ணிலாப் பிறவிகளில்  என் பெயர்களும்  எண்ணில.. எண்ணிக்கை  ஒன்றே நம் ஒற்றுமை.. அதுசரி.. எப்பெயரிட்டு அழைப்பாய் எனை நீ? <<Previous     Next>> Back to Index  

நாமச்சுவை..(1)

Image
ஆதிமூலம்.. பரப்ரும்மம்.. ஸர்வவ்யாபி.. ப்ரணவாகாரம்.. எல்லாம் உன் பெயர்தான்.. ஆனையரசு அழைத்தபோது பறந்தோடி வந்தாய்தான்.. மறுப்பதற்கில்லை.. ஆனால், கண்ணா.. நீலவண்ணா.. கிரிதாரா.. என்றழைக்கும்போதே.. இதயம் கரைந்து நாவில் தேன் சுரக்கிறதே.. அதன் சுவை நீ அறியமாட்டாய்.. இப்பெயர்களின் ஒலிச்சுவையில் திளைக்கவே நீ வருகிறாய்.. Next>> Back to Index