கரை காணாத இக்கடலில் உன் பெயர்ப்படகில் ஏறிப் பயணிக்கிறேன். புயல் காற்று நீரை வாரி என்மேல் இறைக்கிறது. படகு என்னைப் பிடித்துக்கொண்டிருப்பதால் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். நிச்சயம் செய்தபின் மணநாளை நோக்கிக் காத்திருப்பவர் போல தேதி கிழிக்கப்படுகிறது.
Posts
Showing posts with the label inSearchOfMe
- Get link
- X
- Other Apps
மனம் கேட்பதனைத்தையும் மிகவும் சிரமப்பட்டு ஓய்வொழிச்சல் இன்றி எங்கெங்கோ அலைந்து எப்படியோ தேடி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆச்சரியம்.. கொடுப்பனைத்தும் கணநேரத்தில் காணாமல் போயிற்று.. உள்ளே வந்து பார்த்தால்தான் தெரிகிறது.. மலையப்பனான நீ அனைத்தையும் விழுங்கிக்கொண்டிருக்கிறாய்.. இனி கொடுக்கப் பொருளேதுமில்லை என்னைத் தவிர..
- Get link
- X
- Other Apps
கனவில் வந்த முகம் மறந்துபோயிருந்தாலும், விழிக்கும்போது எழும் புன்னகைக்குக் காரணம் கனவில் கேட்ட உன் குழலிசைதான். சொல்லத் தெரியாமல் கனக்கும் மனம் சட்டென்று ஒரு கணத்தில் லேசாவதின் காரணம் உன் மனத்தில் ஒரு கணம் எழுந்த என் நினைவுதான். அலையலையாய் எழும் எண்ணக் குவியல்களின் நடுவில் சட்டென்று மனம் சிந்தனையற்று நிற்பதன் காரணம் உன் மயிலிறகசைவுதான். இதுவரை பார்க்கவில்லையென்றாலும் மறைபொருளாய் என் பக்கலில் எப்போதும் இருப்பது நீ நீ நீயேதான்.
- Get link
- X
- Other Apps
உறங்கும் நேரம் நினைவாய் நிற்கும் நீ.. விடிந்ததும் என்னை எழுப்பி இப்பாழும் உலகில் தள்ளிவிட்டு எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறாய்.. உன் பார்வை என்னை வழுக்கும் விஷய விஷங்களுக்குள் விழாமல் காத்தபோதும் உன் கரம் பிடித்து நடக்க மனம் ஏங்குகிறது.. https://scontent.fmaa6-1.fna.fbcdn.net/v/t1.6435-9/57581506_10157339411966757_4139913448991490048_n.jpg?stp=dst-jpg_s720x720&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=J2LEK8zyhagAX_hk85m&_nc_ht=scontent.fmaa6-1.fna&oh=00_AT8dM83ru_uPZpZN_GJRFRJta95e7Eylmih0P6k3Q8uYSg&oe=62D8386C
- Get link
- X
- Other Apps
நீ இங்கேதான் இருக்கிறாய்.. தென்றல் சுமந்து வரும் துளஸியும் மகிழம்பூவும் கலந்த நறுமணம்.. நேற்று வாடத்துவங்கியிருந்த புற்கள் பசுமை போர்த்தி இன்று நிமிர்ந்து நிற்கின்றன.. யமுனையின் துள்ளல் நேற்றைவிட அதிகமாய்.. மரக்கிளைகள் நீ தடவிச்செல்ல வாகாய்த் தழைந்திருக்கின்றன.. இம்மலர்கள் வழக்கத்தை விடச் சற்று பெரியதாய்.. நீ இங்கேதான் இருக்கிறாய்.. எனக்குத் தெரியும்.. என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்பதும் தெரியும். எனக்கது போதும்.. நான் உன்னைப் பார்க்காவிடில் என்?