திருட்டுப்பையனின் வெகுளித்தனம்.. கோடி வீட்டு கோபி வைத்துவிட்டுப்போன பானைகள் அனைத்தும் கபளீகரம்செய்தாயிற்று. எப்படியோ யசோதா கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பட்டு மஞ்சத்தில் வந்து உறங்குவதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருக்கும் கண்ணனைப் பார்த்து யசோதைக்கு ஒருபுறம் பாவமாக இருந்தாலும், இன்னொரு புறம் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. தன்னை மீறி கலகலவென்று சிரிக்க, அம்மா சிரிப்பதைப் பார்த்து அதற்கு மேல் நடிக்க முடியாமல் கள்ளக் கண்ணனும் சிரித்துவிட்டான். அவ்வளவுதான், சிரிப்பை மறந்துவிட்டுப் பாலை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள் யசோதை. தொப்பை நிறைய வெண்ணையும் பாலும் விழுங்கிப் போதாக்குறைக்கு குரங்குக்கும் ஊட்டி விட்டாயிற்று. மதியம் பருப்புசாதத்தை ஏமாற்றி ஊட்டி விட்டாள். இப்பொழுது பால். எப்படிக் குடிப்பது? ஆரம்பித்தான், அம்மா அதான் சமத்தா பருப்பு சாதம் சாப்பிட்டேனே. பால் வேறு குடிக்கணுமா? ஆமாண்டா கண்ணா. நம்ம வீட்டு மாடெல்லாம் உனக்காகத்தான் கறக்கறது. நீ குடிக்க வேண்டாமா? கன்னுக்குட்டிக்கு வேண்டாமா? கன்னுகுட்டியெல்லாம் குடிச்சாச்சுடா. என் சமத்துக் கன்னுக்குட்டி நீதான் இன்னும் பால் குடிக்கல. அம்மா ...
த்வயி மே அனன்யவிஷ்யா மதிர்மதுபதே அஸக்ருத்| ரதி முத்வஹதாதத்தா கங்கேவௌக முதன்வதி|| (1:8:42) க்ருஷ்ணா! கங்கா ப்ரவாஹம் எப்படி தங்கு தடையின்றிப் பாய்ந்து ஸமுத்திரத்தை அடைகிறதோ, அதுபோல், என் புத்தியானது மற்ற எந்த விஷயங்களாலும் தடைப்படாமல் எப்போதும் உன்னிடமே ஈடுபடட்டும்.. - குந்தி ஸ்துதி
மலையேந்தும் விரல் குடையைப் பிடிக்கவே நமக்கு ஐந்து விரல்கள் தேவையாயிருக்க, மலை பிடிக்க பகவானுக்கு ஒரு விரலே போதுமாயிருந்தது. நந்தனுக்குப் பெருமை பிடிபடவில்லை. பார், என் பையனாக்கும் மலைய தூக்கறான் என்று பெருமையடித்துக் கொண்டிருந்தான். யசோதைக்கு மிகுந்த கோபம். நந்தனை இடித்துப் பேசினாள். ஊரைக் காப்பாத்தும் பொறுப்பு உமதாயிருக்க, என் பிள்ளை இளிச்சவாயனா? அவன்தான் மலைய தூக்கணுமா? அதான் தடி தடியா இத்தனை பேர் வேலைக்கு வெச்சிருக்கீங்களே. அவங்கள யாரையாவது தூக்கச் சொல்லுங்க. என் பிள்ளை சின்னக் குழந்தை.. பாவம். என்றாள். கோபச்சிறுவர்கள் எல்லாருக்கும் குஷி. கண்ணா, நாங்க நல்லா கெட்டியா மரம் குச்சியெல்லாம் கொண்டு வரோம். அங்கங்க முட்டுக் குடுத்து இந்த மலையை நிக்க வெச்சுட்டு வா, கொஞ்ச நேரம் கோலியடிச்சு விளையாடலாம் என்று கூப்பிட்டனர். வயதான பாட்டிகள் அங்கேயே ஓரமாய் அமர்ந்து பாக்கு இடிக்கத் துவங்கினர். கோபிகளின் ஆனந்தத்தை சொல்ல இயலுமா? இரண்டு வருடங்களாக தினமும் காலை மாடு மேய்க்கச் செல்லுமுன் ஒரு தரிசனம், திரும்பி வரும்போது ஒரு தரிசனம், இவர்கள் காட்டு வழி சென்றால், எப்போ...
Comments
Post a Comment