கிரிதர கோபாலா.. (36)
ஸாதுக்களுடன் துவாரகையை நோக்கிக் கிளம்பினாள் மீரா. வழியெங்கும் பெரும் மக்கள் கூட்டம் மீரா மாதா, மீரா மாதா என்று வாஞ்சையுடன் கூறிக்கொண்டு இணைந்துகொண்டனர். ஒவ்வொரு ஊராகத் தங்கி கீர்த்தனம் செய்துகொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் புஷ்கர் எனப்படும் க்ஷேத்ரத்தைக் கடந்து சென்றதாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்கிறது. தீர்த்தராஜ் என்றழைக்கப்படும் புஷ்கர் என்பது பெரிய ஏரியாகும். அங்கு தீர்த்த ரூபத்தில் பகவான் விளங்குகிறான். புஷ்கர் ஏரியின் கரையில் மீரா தங்கிய இடம் உள்ளது. அந்த ஆசிரமம் மிக அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கே மிக அழகான கிரிதாரியின் மூர்த்தி உள்ளது. அங்கிருந்து கிளம்பும்போது, மீரா தன் கிரிதாரியை அங்கே வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி வழிபாடு செய்து வருகின்றனர். ஒரு வாறாக, சில மாதங்களில் துவாரகையை அடைந்தார்கள். தன்மீது அளவற்ற அன்பு கொண்டு தொடரும் லட்சக்கணக்கான மக்களைப் பார்த்து, கிரிதாரியின் லீலையை நினைத்து வியந்தாள் மீரா. துவாரகையில் கண்ணனின் கோவிலின் முன் நின்றனர். வானளாவிய கோபுரம்! பெரிய வாயிற்கதவுகள் மூடிக்கிடந்தன. எத்தனை காலமாயிற்றோ! அதுவர...