Posts

Showing posts with the label Diamond

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில‌ ரத்தினங்கள் (24)

Image
தா⁴நவ்ரத தபோஹோம ஜபஸ்வாத்⁴யாய ஸம்யமை: | ஶ்ரேயோபி⁴ர் விவிதை⁴ஶ்சான்யை: க்ருஷ்ண ப⁴க்தி:ஹி ஸாத்⁴யதே|| (ஸ்ரீமத் பாகவதம் 10:47:24) தானம், விரதம், தவம், ஹோமங்கள், ஜபம், வேதம் ஓதுதல், புலனடக்கம் ஆகிய உயர்ந்த நியமங்களின் பயனாக ஒருவனுக்கு ஸ்ரீ க்ருஷ்ணனிடம் பக்தி ஏற்படுகிறது.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் ( 23)

Image
ஸாங்கேத்யம் வா பாரிஹாஸ்யம் வா ஸ்தோப4ம் ஹேலனமேவ வா | வைகுண்ட2நாமக்3ரஹணம் அஶேஷாக4 ஹரம் விது:3|| (ஸ்ரீமத் பாகவதம் 6:2:14) உலகியல் வேலைக்காக ஏதோ காரணமாக எதையாவது நினைத்துக் கொண்டோ, ஜாடையாவோ,  பாடும்போது ஆலாபனை முற்றுப்பெறவோ, பிறரை அழைக்கவோ, ஏளனம் செய்யவோ, எவ்வாறாகிலும் பகவன் நாமத்தை ஒருவர் உச்சரிப்பாராகில், அவரது பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. படம் :  ஸ்ரீ சதுர்புஜ நாதர், மெர்டா நகரம், ராஜஸ்தான்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (22)

Image
चिंतामणिर्लॊकसुकं  सुरद्रुः स्वर्गसंपदम् । प्रयच्छित गुरुः प्रीतॊ  वैकुण्ठं यॊगिदुर्लभम् ।। சிந்தாமணிர் லோகஸுகம்‌ ஸுரத்ரு: ஸ்வர்க ஸம்பதம்| ப்ரயச்சதி குரு: ப்ரீதோ வைகுண்டம்‌ யோகி துர்லபம் || (ஸ்ரீமத் பாகவத மாஹாத்ம்யம் 1:8) தேவர்கள் உலகில் விளங்குவது  சிந்தாமணி. இம்மணியை வைத்திருப்பவர்கள் இம்மண்ணுலகில் எல்லைக்குள் இருக்கும் எப்பொருளை விரும்பினாலும் உடனே  பெற்றுத்தரும். கற்பகத் தரு என்னும் மரமும் தேவர்களின் உலகில்‌ இருப்பதேயாகும். இம்மரத்தின் அடியில் நின்றுகொண்டு தேவர்கள் உலகம் வரை உள்ள எப்பொருளை விரும்பினாலும் உடனே பெற்றுத்தரும்.  இவ்விரண்டும் செயல்படுவதற்கு எல்லை உண்டு.  ஆனால்,  சிறிய சேவையே ஆனாலும், அதனால்  குரு மகிழ்வாரேயானால், யோகிகளும் அடைவதற்கு மிகுந்த சிரமப்படுவதானால் அந்த வைகுண்டத்தையே பெற்றுத் தந்து விடுவார்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (21)

Image
यत्र निर्विष्टमरणं कृतान्ते नाभिमन्यते । विश्वं विध्वंसयन्वीर्य शौर्यविस्फूर्जितभ्रुवा ।। யத்ர நிர்விஷ்டம் அரணம் க்ருதாந்தோ நாபிமன்யதே | விஶ்வம் வித்வம்ஸயன் வீர்ய ஶௌர்யவிஸ்பூர்ஜிதப்ருவா || (ஸ்ரீமத் பாகவதம் 4:24:56) தன் சக்தியாலும், பராக்ரமத்தாலும் புருவத்தை நெறித்து இந்த ப்ரபஞ்சத்தை அழித்தொழிக்கும் மரணதேவன் கூட  பகவானுடைய திருவடியில் அடைக்கலம் புகுந்தவரிடம் தன் அதிகாரத்தைச் செலுத்த இயலாது. அதாவது,பகவானின் அடியார்களுக்கு யமபயம் இல்லை.. Audio link: https://drive.google.com/file/d/1fN0wrvem2OJ2hH6br1FFTii0Y9lu1bPt/view?usp=drivesdk Picture:  Smt. Madhuri Saki with Takurji Keerthanavali Mandapam Kanchipuram

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (20)

Image
நாரதர் விஸாசரிடம் சொல்வதாக அமைந்துள்ள ஸ்லோகங்களுள் ஒன்று एतद्ध्यातुरचित्तानां मात्रास्पर्शेच्छया मुहुः । भवसिन्धुप्लवॊ दृष्टॊ  हरिचर्यानुवर्णनम् ।। ஏதத்த்யாதுரசித்தானாம் மாத்ராஸ்பர்ஶேச்சயா முஹு:| பவஸிந்துப்லவோ த்ருஷ்டோ ஹரிசர்யாநுவர்ணநம் || (ஸ்ரீமத் பாகவதம் 1:6:35) இவ்வுலகியல் இச்சைகளுக்கு ஆட்பட்டுத் தவிக்கும் மாந்தர்களுக்கு இந்த துக்கமயமான  ஸம்ஸாரத்தைக் கடக்க பயன்படும் தோணியாக விளங்குவது,  பகவானின் திருவிளையாடல்களைக் கேட்பது ஒன்றேயாகும். Audio link https://drive.google.com/file/d/1ORWvFl_o2WVeYs7T7H-ieX6l36OOcIFJ/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (19)

Image
न ह्यतोsन्यः शिवः पन्था विशतः संसृताविह । वासुदेवे भगवति भक्तियॊगॊ यतॊ भवेत्।। ந ஹ்யதோsன்ய: ஶிவ: பந்தா விஶத: ஸம்ஸ்ருதாவிஹ| வாஸுதேவே பகவதி பக்தியோகோ யதோ பவேத்|| (ஸ்ரீமத் பாகவதம் 2:2:33) இந்தப் பூவுலகில் விழுந்து தவிக்கும் ஒருவனுக்கு நன்மையளிக்கும் வழி  ஒன்றேயாகும்.  அது, பகவான் வாசுதேவனிடம் அன்புடன் பக்தி செய்யும் வழியே. அதைத் தவிர வேறு வழி இல்லை. Thanks to  Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1HGZ6ZFjpqfDbQk3YhGNoTbji-J5HIEe-/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (18)

Image
नोत्तमश्लोकवार्तानां जुषतां तत्कथामृतम् । स्यात्सम्भ्रमोsन्तकालेsपि स्मरतां तत्पदाम्बुजम् ।। நோத்தமஶ்லோகவார்தாநாம் ஜுஷதாம் தத்கதாம்ருதாம் | ஸ்யாத்ஸம்ப்ரமோsந்தகாலேsபி ஸ்மரதாம் தத்பதாம்புஜம்|| (ஸ்ரீமத் பாகவதம் 1:18:4) மிகவும் கீர்த்தி வாய்ந்த பகவானது திருவிளையாடல்களைப் பற்றியே கேட்பவர்களும், பேசுபவர்களும், அவனது திருவடித் தாமரைகளையே எப்போதும் நினைத்து உருகுபவர்களும் மரணகாலத்தில் கூடக் கலங்குவதில்லை. Audio https://drive.google.com/file/d/18uNtUkdr1rmmUD_8fKm1JzpHBZZCif2z/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (17)

Image
அபிமன்யுவின் மனைவியான உத்தரை அச்வத்தாமன் விடுத்த ப்ரும்மாஸ்திரத்திலிருந்து தன் கர்பத்தைக் காப்பாற்றும்படி பகவானிடம் வேண்டிய ஸ்லோகம் . पाहि पाहि  महायॊगिन् देवदेव जगत्पते। नान्यम्  त्वदभयं पश्ये यत्र मृत्युः परस्परम्।। பாஹி பாஹி மஹாயோகின்! தேவதேவ! ஜகத்பதே! | நான்யம் தவபயம் பஷ்யே யத்ர ம்ருத்யு: பரஸ்பரம்|| (ஸ்ரீமத் பாகவதம் 1:8:9) யோகீஸ்வரனே! உலகங்கள் அனைத்திற்கும் தலைவனே! தேவர்களுக்கெல்லாம் தெய்வமாய் விளங்குபவனே! என்னைக் காப்பாற்றுங்கள். ஒருவருக்கொருவர் விரோதிகளாய் இருக்கும் மனிதர்கள் நிரம்பிய இவ்வுலகில் எனக்கு உம்மைத்தவிர அபயம் தருபவர் எவருமில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்! கர்பிணிகள் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் அவர்களது கர்பம் காப்பாற்றப்படும். Thanks to subasree Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1abpCeatakXE1p8ZIbnjnrc3IbOUo2b_3/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (16)

Image
இந்திரனுடன் வ்ருத்திராசுரன் சண்டையிடும்போது பகவானைத் துதித்த ஸ்துதியிலிருந்து.. अहं हरे तव पादैकमूल  दासानुदासॊ भवितास्मि भूयः । मनः स्मरेतासुपतेर्गुणांस्ते  गृणीत वाक्कर्म करॊतु कायः।। அஹம் ஹரே‌ தவ பாதைகமூல தாஸாநுதாஸோ பவிதாஸ்மி பூய:| மன: ஸ்மரேதாஸுபதோ குணாம்ஸ்தே க்ருணீத வாக்கர்ம கரோது காய:|| (ஸ்ரீமத் பாகவதம் 6:11:24) ஸ்ரீமன் நாராயணா! உம்முடைய திருவடிகளையே முக்கியமான ஆஷ்ரயமாகக் கொண்ட பக்தர்களைப் பின்பற்றும் தாஸனாக எப்போதும் இருக்கப்போகிறேன். ப்ராணநாதனாகிய உமது குணங்களை மனது எப்போதும் தியானிக்க வேண்டும். வாக்காகிய இந்திரியம் உமது குணங்களையே துதிக்கவேண்டும். உடம்பு விதிக்கப்பட்ட வேலைகளைச் செய்யட்டும். Thanks to Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1fn31MFKZ4cQVQJrzPbJwp6GM8c5q96FI/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (15)

Image
यॊsनुग्रहार्थं भजतां पादमूलमनामरूपॊ भगवाननन्तः । नामानि रूपाणि च जन्मकर्मभिः  भेजे स मह्यं परमः  प्रसीदतु ।। யோsநுக்ரஹார்தம் பஜதாம் பாதமூலம் அநாமரூபோ பகவான் அனந்த: | நாமானி ரூபாணி ச ஜனாகர்மபி: பேஜே ஸ மஹ்யம் பரம: ப்ரஸீதது || (ஸ்ரீமத் பாகவதம் 6:4:33) தக்ஷப்ரஜாபதி ஸ்ருஷ்டியைத் துவக்கும்முன் செய்த பிரார்த்தனையிலிருந்து உண்மையில் பெயர் உருவமில்லாத அடையாளங்களுமில்லாத கடவுளானவர் பக்தியால் அவரது அனுக்ரஹத்தை அடையத் தகுந்தவர்களுக்கு தன் சரணங்களைக் கொடுப்பதற்காக உருவங்களை ஏற்று, அவதாரங்கள் செய்து, லீலைகளும் செய்கிறார். அப்பேர்ப்பட்ட பரமாத்மா எனக்கு அருள் புரியட்டும்.. Thanks to Smt.  Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1shOKiXlCKMtKNm34qz1LDX5zqaQDEe6B/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்(14)

Image
यत्सेवयाग्नेरिव रुद्ररोदनं पुमान्विजह्यान्मलमात्मनस्तम् | बडेत वर्णों निजमेष  सोsव्ययो भूयात्स ईशः परमो गुरोर्गुरुः || யத் ஸேவயாக்நேரிவ ருத்ரரோதனம் புமான் விஜஹ்யான்மல மாத்மனஸ்தம் | பஜேத வர்ணம் நிஜமேஷ ஸோவ்யயோ பூயாத்ம ஈஷ: பரமோ குரோர்குரு: || (ஸ்ரீமத் பாகவதம் 8:24:48) மத்ஸ்யாவதாரமாய் வந்த பகவானை ஸத்யவ்ரதன் செய்த ஸ்துதியிலிருந்து.. நெருப்பில் காய்ச்சப் படுவதால் வெள்ளி அழுக்கு நீங்கி ப்ரகாசிக்கிறது. அதுபோல் யாதொரு கடவுளை சேவிப்பதால் மனிதன் அழுக்குகளையும், அஞ்ஞானத்தையும் எளிதில் விட்டு விடுகிறானோ, அப்படிப்பட்ட மாறுபாடற்ற ஸர்வேஸ்வரனே எங்களுக்கு குருவின் வடிவில் இருக்கட்டும். அவரே  குருமார்களுக்கெல்லாம் குருவாவார். Thanks to Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1pG0wL6pFArFmhF9VtFp6uzeq0sgkHXTY/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (13)

Image
श्रुण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णशः स्मरन्ति नन्दन्ति तवेहितं जनाः | त एव पश्यन्त्यचिरेण तावकं  भवप्रवाहो परमं पदाम्बुजम् || ச்ருண்வந்தி காயந்தி க்ருணந்த்யபீக்ஷ்ணஶ: ஸ்மரந்தி நந்தந்தி தவேஹிதம் ஜனா:| த ஏவ பஶ்யந்த்ய சிரேண தாவகம் பவப்ரவாஹோபரமம் பதாம்புஜம்|| (ஸ்ரீமத் பாகவதம் 1:8:36) அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்பத்தை அழிக்க அஸ்வத்தாமன் ப்ரும்மாஸ்திரம் எய்தான். பகவான் க்ருஷ்ணன் சிறிய உருவெடுத்து கர்பத்தினுள் சென்று ப்ரும்மாஸ்திரத்திலிருந்து குழந்தையைக் காத்தான். நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மஹாராணி குந்தி, தன் வம்சத்தின் ஒரே வாரிசை காப்பாற்றிக் கொடுத்த கண்ணனை ஸ்துதி செய்கிறாள்.. அதிலிருந்து ஒரு ரத்தினம்.. ஹே க்ருஷ்ணா! யார் தங்களுடைய சரித்திரத்தைக் கேட்கிறார்களோ,  கானம் செய்கிறார்களோ, மறுபடி மறுபடி சொல்கிறார்களோ,  அடிக்கடி நினைக்கிறார்களோ, அதனால் மகிழ்ச்சியடைகிறார்களோ,  அவர்களே  ஜென்ம பரம்பரையை முடிக்கும் உந்தன் திருவடித்தாமரையை  சீக்கிரம் பார்க்கிறார்கள். Thanks to Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/...

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (12)

Image
न हि भगवन्नघटितमिदं त्वद्दर्शनान्नृणामखिल पापक्षयः | यन्नाम  सकृच्छ्रवणात्पुल्कसकॊsपि विमुच्यते संसारात् || ந ஹி பகவன் ந கடிதமிதம்  த்வத்தர்ஷனாந்ந்ரூணாமகில பாபக்ஷய : | யந்நாம ஸக்ருச்ச்ரவணாத் புல்கஸகோ(அ)பி விமுச்யதே ஸம்ஸாராத்|| (ஸ்ரீமத் பாகவதம் 6:16:44) சித்ரகேது என்ற கந்தர்வன் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்துச் செய்யும் ஸ்துதியிலிருந்து.. பகவானே!  உம்மைப் பார்ப்பதனால் மனிதர்களுக்கு ஸகல பாவங்களின் அழிவு சம்பவிக்கிறது. உம்முடைய ஒரே ஒரு நாமாவை ஒரே ஒரு முறை கேட்டாலும்கூடப் போதும். மாபாதகங்கள் செய்தவன்கூட உலக பந்தத்திலிருந்து  விடுபட்டு முக்திநிலையை அடைந்து விடுகிறான். Thanks to  Subashree Venkatraman for the audio https://drive.google.com/file/d/1XcriLKNkh-YP3_wBozNgprl4HJds49Hx/view?usp=drivesdk

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (11)

Image
अजातपक्षा इव मातरं  खगाः  ‍‍स्तन्यं यदा वत्सतराः क्षुधार्ताः | प्रियं प्रियेव व्युषितं विषण्णा  मनोsरविन्दाक्ष दिदृक्षते त्वाम् || அஜாதபக்ஷா இவ மாதரம் ககா:  ஸ்தன்யம் யதா வத்ஸதரா: க்ஷுதார்தா: | ப்ரியம் ப்ரியேவ வ்யுஷிதம் விஷண்ணா  மநோ(அ)ரவிந்தாக்ஷ தித்ருக்ஷதே தவாம்||  (ஸ்ரீமத் பாகவதம் 6:11:26) Audio: https://drive.google.com/file/d/12fzlbDE01_QOPi8MUZyUcXj17Yt_9h7L/view?usp=drivesdk Thanks to  Subashree Venkatraman எந்த நிலையில் இருந்தாலும் பகவானிடம் பக்தி செலுத்துவதற்கு யாதொருதடையுமில்லை என்று நிரூபிக்கும் வண்ணம், வ்ருத்திராசுரன் இந்திரனோடு யுத்தம் செய்த சமயத்தில் பகவானை நினைத்துச் செய்த ஸ்துதியிலிருந்து... இறக்கை முளைக்காமல் தாய்ப் பறவையை எதிர்பார்த்துக்கொண்டு  கூட்டிலிருக்கும் குஞ்சுப் பறவையைப் போலவும், பசியால் வாடியபோதிலும் தும்பினால் கட்டப்பட்டதால் தாய்ப் பசுவை எதிர்நோக்கும் கன்றைப் போலவும், அயலூர் சென்ற கணவனின் பிரிவுத்துயரால் வருந்தும் மனைவியைப் போலவும், தாமரைக் கண்ணா என் மனம் உன்னையே காண விரும்புகிறது.  இந்த ஸ்லோகத்தின் மூலம்...

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (10)

Image
தத் தே (அ)ர்ஹத்தம:நம: ஸ்துதி கர்ம பூஜா:  கர்ம ஸ்ம்ருதிஶ் சரணயோ: ஶ்ரவணம் கதாயாம் | ஸம்ஸேவயா த்வயி விநேதி ஷடங்கயா கிம் பக்திம் ஜன: பரமஹம்ஸகதௌ லபேத|| (ஸ்ரீமத் பாகவதம் 7:9:50) ஸ்ரீ ந்ருஸிம்ம பகவானைப் பார்த்து ப்ரஹலாதன் செய்யும் ஸ்துதியிலிருந்து.. ஓ சிறந்த கடவுளே! தாங்கள் பரமஹம்ஸர்களால் அடையப்படுகிறீர். ஆனால்,  கீழே விழுந்து நமஸ்கரித்தல்,  துதித்தல்,  எல்லா கர்மாக்களையும் பகவத் அர்ப்பணம் செய்தல்,  ஸாதுக்களுக்குப் பணிவிடை செய்தல்,  தமது பாதாரவிந்தத்தை நினைத்தல், ஸத்கதைகளைக் கேட்டல் என்ற ஆறு அங்கங்களைப் பின்பற்றுவதாலெயே ஜனங்கள் உம்மிடத்தில் பக்தியை அடைகிறார்கள். Audio link https://drive.google.com/open?id=1GzDl6V5SVQ-vMckAtsVZcjsMJAmLL3FI Thanks to Subashree Venkatraman

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (9)

Image
ஏவம் விம்ருஶ்ய ஸுதியோ பகவத்யநந்தே ஸர்வாத்மநா விதததே கலு பாவயோகம் | தே மே ந தண்டமர்ஹந்த்யத யத்யமீஷாம் ஸ்யாத் பாதகம் ததபி ஹந்த்யுருகாயவாத:|| (ஸ்ரீமத் பாகவதம் 6:3:26) மரணப்படுக்கையில் தன் மகனை நாராயணா என்று அழைத்தபோதும், விஷ்ணு தூதர்கள் ஓடிவந்து  அஜாமிளனின் உயிரை  விடுவித்தனர். அடாத பாவச்செயல்கள் புரிந்த அஜாமிளனை விஷ்ணுதூதர்கள் விடுவித்ததின் காரணம் புரியாமல் யமதூதர்கள்  தங்கள் தலைவனான யமராஜனிடம் கேட்டனர். ஜீவன்களை சரீரத்திலிருந்து விடுவித்து அவர்களது பாவ புண்யங்களை ஆராய்ந்து தக்க பலனை வழங்கும் பதவியிலிருக்கும் யமராஜன் அவர்களுக்குச் சொன்ன பதிலிலிருந்து.. மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களாலும் பகவான்  ஹரியினடத்தில் பக்தி செய்பவர்கள் புத்திமான்களாக அறியப்படுகிறார்கள். அவர்களிடம் பாவம் இருந்தாலும் அது அவர்கள் செய்யும் நாராயண ஸங்கீர்த்தனத்தினாலேயே அழிந்து விடுகிறது. பகவானான  ஹரியைத் தலைவனாகக் கொண்ட அவர்கள் நான் அளிக்கும் தண்டனைக்குத் தகுதி வாய்ந்தவர்களல்லர். அதனால் இந்த லோகத்திற்கும் அவர்கள் வரவேண்டியதில்லை..

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (8)

Image
ஶ்ருண்வதாம் ஸ்வகதாம் க்ருஷ்ண: புண்ய ஶ்ரவண கீர்த்தன: | ஹ்ருத்யந்த: ஸ்தோ ஹ்யபத்ராணி விதுநோதி ஸுஹ்ருத்‌ஸதாம் ||  (ஸ்ரீமத் பாகவதம்  1:2:17) நைமிஷாரண்யத்தில் யாகம் செய்த வேதியர்களின் கேள்விகளுக்கு ஸூதபௌராணிகர்  பதிலளிக்கும் வண்ணம்   ஸ்ரீமத் பாகவதத்தை சொல்லத் துவங்கிய ஸ்லோகங்களிலிருந்து.. ஸ்ரீ க்ருஷ்ணனைப் பற்றிச் சொல்வதாலும் கேட்பதாலும் நன்மையே உண்டாகும். அவர் ஸாதுக்களின் நண்பர். தன் கதையைக் கேட்பவர்களின் அந்தராத்மாவில் இருந்துகொண்டு அவர்களது மனத்திலுள்ள கல்மஷங்களைப் போக்குகிறார்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (7)

Image
அத  கதஞ்சித் ஸ்கலத க்ஷுத்பதநஜ்ரும்பணதுரவஸ்தாநாதிஷு விவஶாநாம் ந: ஸ்மரணாய ஜ்வரமரண தஶாயாமபி ஸகல கஶ்மலநிரஸ நாநி தவ குண க்ருதநாமதேயாநி வசன கோசராணி பவந்து||  (ஸ்ரீமத் பாகவதம் 5:3:12) நாபி மஹாராஜா செய்யும் யாகத்தில் ஆவிர்பவித்த (தோன்றிய) பகவானைப் பார்த்து ரித்விக்குகள் செய்த ஸ்துதியிலிருந்து... ஹே பகவன்! தங்கள் தரிசனத்தால் நாங்கள் க்ருதார்த்தர்களானோம்.(எங்கள் வாழ்வின் பலன் கிடைத்துவிட்டது) இருந்தாலும், இடறுதல், பசித்தல், கீழே விழுதல், மற்றும் கஷ்ட நிலைமைகளிலும், ஜுரம் வந்தபோதும், வியாதி வாட்டும்போதும், மரண காலத்திலும் உம்மை  நினைக்க சக்தியற்றவர்களாக இருக்கிறோம். எல்லா பாவங்களையும் அழிக்கும் குணங்களால் உமக்கு ஏற்பட்ட நாமங்களை எங்களுக்கு எப்படியாவது நினைவுபடுத்தி நாங்கள் எப்போதும்  அவற்றை உச்சரிக்குமாறு எங்களை ஆக்கிவிடுங்கள்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்(6)

Image
யோ வா இஹ தே (அ)பராஜிதோ (அ)பராஜிதயா மாயயா அனவஸித பதவ்யாநாவ்ருத மதிர் விஷயவிஷரயாநாவ்ருத ப்ராக்ருதிரநுபாஸித மஹச்சரண: || (5:3:14) நாபி மஹாராஜன் யாகம் செய்யும்போது பகவான் ஆவிர்பவித்தான். அப்போது ரித்விக்குகள் செய்த ஸ்துதியிலிருந்து... ஸாது மஹிமா ஸாதுக்களின் பாதங்களை உபாசிப்பவர்கள், இந்திரியங்களுக்கு வசப்படாதவர்களாகவும், எவ்விடத்திலும் தோல்வியடையாதவர்களாகவும், இருப்பார்கள். மஹாத்மாக்களின் பாதங்களை சரணடைந்தவர்கள், புத்தியை மயக்கி தீர்மானைக்க முடியாத வழியைக் காட்டும் மாயையாலும், விஷய விஷத்தாலும் பாதிக்கப்படாத இயல்புடையவர்களாக இருப்பார்கள்.

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (5)

Image
தர்ஶனம் நோ தித்ருக்ஷூணாம் தேஹி பாகவதார்ச்சிதம்| ரூபம் ப்ரியதமம் ஸ்வாநாம் ஸர்வேந்த்ரிய குணாஞ்ஜனம்|| ( ஸ்ரீமத் பாகவதம் 4:24:44) ப்ராசீன பர்ஹிஸ் என்பவரின் புதல்வர்களுள்‌ பதின்மர்  ப்ரசேதஸர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். பூமியில் ஸ்ருஷ்டியை ஏற்படுத்துவதற்காகக் கிளம்பிய அவர்களுக்கு ஸ்ரீ ருத்ரன் தரிசனம் கொடுத்து, ஸ்ரீ ஹரியின் பெருமைகளையும், அவரை அடையும் மார்கத்தையும் உபதேசம் செய்தார். அதிலிருந்து ஒரு ரத்தினம் இதோ : ஹே பகவன்!  தங்களது திருவுருவம் அடியார்களுக்கு மிகவும் ப்ரியமானது. எல்லா இந்திரியங்களுக்கும் நன்மை பயக்கும் மருந்து போன்றது. பக்தர்களால் விரும்பி வணங்கத்தக்க தங்கள் திருவுருவத்தை  எமக்குக் காட்டுங்கள்..