ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (7)
அத கதஞ்சித் ஸ்கலத க்ஷுத்பதநஜ்ரும்பணதுரவஸ்தாநாதிஷு
விவஶாநாம் ந: ஸ்மரணாய ஜ்வரமரண தஶாயாமபி ஸகல கஶ்மலநிரஸ நாநி தவ குண க்ருதநாமதேயாநி வசன கோசராணி பவந்து||
(ஸ்ரீமத் பாகவதம் 5:3:12)
நாபி மஹாராஜா செய்யும் யாகத்தில் ஆவிர்பவித்த (தோன்றிய) பகவானைப் பார்த்து ரித்விக்குகள் செய்த ஸ்துதியிலிருந்து...
ஹே பகவன்!
தங்கள் தரிசனத்தால் நாங்கள் க்ருதார்த்தர்களானோம்.(எங்கள் வாழ்வின் பலன் கிடைத்துவிட்டது)
இருந்தாலும், இடறுதல், பசித்தல், கீழே விழுதல், மற்றும் கஷ்ட நிலைமைகளிலும், ஜுரம் வந்தபோதும், வியாதி வாட்டும்போதும், மரண காலத்திலும் உம்மை நினைக்க சக்தியற்றவர்களாக இருக்கிறோம். எல்லா பாவங்களையும் அழிக்கும் குணங்களால் உமக்கு ஏற்பட்ட நாமங்களை எங்களுக்கு எப்படியாவது நினைவுபடுத்தி நாங்கள் எப்போதும் அவற்றை உச்சரிக்குமாறு எங்களை ஆக்கிவிடுங்கள்.
Comments
Post a Comment