குருவருள் ஒன்றே கதி - 35
அவதார புருஷர்கள் - 3 ஸ்ரீ ராமக்ருஷ்ண பரஹம்ஸரின் வேண்டுகோளுக்கிணங்க காளி நரேந்திரருக்கு இரண்டு முறை தரிசனம் தந்தாள். இரண்டு முறைகளும் நரேந்திரர் பரவச அனுபவத்தினால் தன்னை மறந்த நிலைக்கு ஆளானார். தன் குடும்ப கஷ்டங்களுக்குத் தீர்வு கேட்க மறந்து பக்தி, ஞானம் மற்றும் வைராக்யத்தை அருளும்படி காளியிடம் வேண்டினார். கடைசியாக இன்னும் ஒரு முறை பவதாரிணியை நரேந்திரருக்கு தரிசனம் தரச் சொல்லி வேண்டினார் குருநாதர். இம்முறையும் இரவு பன்னிரண்டு மணிக்கு அன்னையின் கோவிலை நோக்கி நடந்த நரேந்திரர் மிகத் தெளிவாகத் தன் வேண்டுதல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு மீண்டும் மீண்டும் தனக்குள் ஒராயிரம் முறை சொல்லிப் பார்த்துக்கொண்டு சென்றார். இரவு சரியாக பன்னிரண்டு மணி ஆகும்போது கண்ணனின் சோதரியான பவதாரிணி தோன்றினாள். அன்பே உருவான அன்னையின் முன் நிற்கும் நரேந்திரர் தன் பாக்யத்தை எண்ணி எண்ணி அழ ஆரம்பித்தார். சொல் நரேந்திரா? இன்று மறுபடி வந்திருக்கிறாயே. என்ன வேண்டும் உனக்கு? அன்பின் கீதமாய் இசைக்கும் அவளது குரலினிமையில் மயங்காதார் எவர்? நரேந்திரர் தெளிவாகக் கேட்...