குருவருள் ஒன்றே கதி - 27
முதலைக்கு அருள் - 1
ஆலங்குடி பெரியவா என்ற மஹாத்மா தென் தமிழகத்திலும் தஞ்சை, கும்பகோணம் ஆகியவற்றைச் சுற்றியும் சுற்றித் திரிந்து வந்தார். ஸ்ரீ மத் பாகவதமே அவரது உயிர்மூச்சு. யார் அழைத்தாலும் அங்கு சென்று ஸ்ரீ மத் பாகவதம் சொல்ல ஆரம்பித்துவிடுவார். திகம்பரராக சுற்றித் திரிந்த அவரிடமிருந்து அனவரதமும் ஸ்ரீ மத்பாகவத ஸ்லோகங்கள் வந்துகொண்டே இருக்கும். அவரது உபன்யாசத்தைக் கேட்ட சிலர், அவரிடம் வந்து,
நீங்க ரொம்ப அழகா பாகவதம்சொல்றேள். திகம்பரரா இருந்துண்டு சொல்றதால பொது மக்களும், பெண்களும் வந்து கேக்கணும்னு ஆசையிருந்தாலும், சங்கடப்படறா.
என்றதும்,
அப்டின்னா ஸந்நியாசம் வாங்கிக்கறேன். எல்லாரும் பாகவதம் கேக்கணும் அவ்ளோதான்
என்று சொல்லி ஸந்நியாசம் வாங்கிக்கொண்டுவிட்டார்.
ஒரு சமயம் ஒரு கிராமத்தில், கஜேந்திர மோக்ஷம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதைக்கேட்ட நாஸ்திகனான ஒருவன்,
முதலை காலைப் பிடிக்குமாம், ஸ்லோகம் சொன்னா விட்டுடுமாம். என்ன கதை விடறார் இவர் என்று நினைத்தான்.
பெரியவா ஊர்க்குளத்தில் அதிகாலை ஸ்நானம் செய்யப்போவார். மறுநாள் அவரை சோதனை செய்ய வேண்டி, அந்த துஷ்டன், ஊர்க்குளத்தில் ஒரு குட்டி முதலையைக் கொண்டு வந்து விட்டுவிட்டான்.
சரியாக பெரியவா ஸ்நானம் செய்யும் படித்துறையில் அவன் முதலையை விடவும், அவர் ஸ்நானத்திற்கு வரவும் சரியாக இருந்தது. பெரியவா ப்ரார்த்தனை செய்து, நீரைப் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு நீரில் காலை வைத்ததும் முதலை அவர் அவரது காலைக் கவ்வியது.
குருதியாறு ஓட ஆரம்பித்தது. யார் காலையோ முதலை கவ்வியதுபோல்
பெரியவா, பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க அந்த துஷ்டன் அவரருகில் வந்தான்.
பெரியவரே, நேத்து உபன்யாசத்தில் சொன்னீங்களே. ஸ்லோகம் சொன்னா முதலை விட்டுடும்னு. சொல்றதுதானே. மறந்துபோச்சா?
என்று கேலி செய்தான்.
காலை முதலை கல்விக் கொண்டிருக்கும் போதும் கதறாமல் அவர் வேடிக்கை பார்ப்பது அவன் புத்திக்கு எட்டவில்லை.
அப்போதுதான் பெரியவருக்குப் புரிந்தது, அவன் சோதனை செய்ய வந்தவன் என்று.
ஓ, சொல்றேனே
என்று கூறி
ஏவம் வ்யவஸிதா புத்த்யா ஸமாதாய மனோஹ்ருதி|
ஜஜாப பரமம் ஜாப்யம் ப்ராக்ஜன்மனி அனுஸிக்ஷிதம் ||
என்று ஸ்ரீ மத்பாகவதத்தில் அஷ்டமஸ்கந்தம், மூன்றாவது அத்யாயத்தில் வரும் கஜேந்திர ஸ்துதியை கானம் செய்ய ஆரம்பித்தார்.
சரியாக
சந்தோமயேன கருடேன ஸமுஹ்யமான:
சக்ராயுதோப்யகமதாசு யதோ கஜேந்த்ர:||
அதாவது,
பகவானான ஹரி கருடன் மீதேறி விரைந்து வந்து, முதலையின் மீது சக்கரத்தை ஏவி கஜேந்திரனைக் காத்தான்
என்ற வரியை பெரியவா சொல்லும்போது அவரது காலைப் பிடித்திருந்த முதலை திடீரென வெட்டுப் பட்டது போல் துடிதுடித்து இறந்தது.
பார்த்துக்கொண்டேயிருந்த அந்த நாஸ்தீகனுக்கு பயம் வந்துவிட்டது.
அவரது காலைப் பிடித்துக்கொண்டான்.
மன்னிச்சிடுங்க ஸ்வாமி, தெரியாம தப்பு பண்ணிட்டேன். பெரியவங்களை சோதிக்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியல.
என்று கதறி அழுதான்.
பெரியவா என்ன செய்தார்?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment