ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (17)
அபிமன்யுவின் மனைவியான உத்தரை அச்வத்தாமன் விடுத்த ப்ரும்மாஸ்திரத்திலிருந்து தன் கர்பத்தைக் காப்பாற்றும்படி பகவானிடம் வேண்டிய ஸ்லோகம்.
पाहि पाहि महायॊगिन् देवदेव जगत्पते।
नान्यम् त्वदभयं पश्ये यत्र मृत्युः परस्परम्।।
பாஹி பாஹி மஹாயோகின்! தேவதேவ! ஜகத்பதே! |
நான்யம் தவபயம் பஷ்யே யத்ர ம்ருத்யு: பரஸ்பரம்|| (ஸ்ரீமத் பாகவதம் 1:8:9)
யோகீஸ்வரனே! உலகங்கள் அனைத்திற்கும் தலைவனே! தேவர்களுக்கெல்லாம் தெய்வமாய் விளங்குபவனே! என்னைக் காப்பாற்றுங்கள்.
ஒருவருக்கொருவர் விரோதிகளாய் இருக்கும் மனிதர்கள் நிரம்பிய இவ்வுலகில் எனக்கு உம்மைத்தவிர அபயம் தருபவர் எவருமில்லை.
என்னைக் காப்பாற்றுங்கள்!
கர்பிணிகள் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் அவர்களது கர்பம் காப்பாற்றப்படும்.
Thanks to subasree Subashree Venkatraman for the audio
https://drive.google.com/file/d/1abpCeatakXE1p8ZIbnjnrc3IbOUo2b_3/view?usp=drivesdk
Comments
Post a Comment