ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (13)

श्रुण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णशः
स्मरन्ति नन्दन्ति तवेहितं जनाः |
त एव पश्यन्त्यचिरेण तावकं 
भवप्रवाहो परमं पदाम्बुजम् ||

ச்ருண்வந்தி காயந்தி க்ருணந்த்யபீக்ஷ்ணஶ:
ஸ்மரந்தி நந்தந்தி தவேஹிதம் ஜனா:|
த ஏவ பஶ்யந்த்ய சிரேண தாவகம்
பவப்ரவாஹோபரமம் பதாம்புஜம்||
(ஸ்ரீமத் பாகவதம் 1:8:36)

அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்பத்தை அழிக்க அஸ்வத்தாமன் ப்ரும்மாஸ்திரம் எய்தான். பகவான் க்ருஷ்ணன் சிறிய உருவெடுத்து கர்பத்தினுள் சென்று ப்ரும்மாஸ்திரத்திலிருந்து குழந்தையைக் காத்தான். நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மஹாராணி குந்தி, தன் வம்சத்தின் ஒரே வாரிசை காப்பாற்றிக் கொடுத்த கண்ணனை ஸ்துதி செய்கிறாள்..

அதிலிருந்து ஒரு ரத்தினம்..

ஹே க்ருஷ்ணா!

யார் தங்களுடைய சரித்திரத்தைக் கேட்கிறார்களோ, 

கானம் செய்கிறார்களோ,

மறுபடி மறுபடி சொல்கிறார்களோ, 
அடிக்கடி நினைக்கிறார்களோ,

அதனால் மகிழ்ச்சியடைகிறார்களோ, 

அவர்களே 

ஜென்ம பரம்பரையை முடிக்கும்
உந்தன் திருவடித்தாமரையை  சீக்கிரம் பார்க்கிறார்கள்.

Thanks to Subashree Venkatraman for the audio

https://drive.google.com/file/d/1uKBRRMKD_Niikm1JfpdcZVejRPtPwwql/view?usp=drivesdk

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37