ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (9)

ஏவம் விம்ருஶ்ய ஸுதியோ பகவத்யநந்தே
ஸர்வாத்மநா விதததே கலு பாவயோகம் |
தே மே ந தண்டமர்ஹந்த்யத யத்யமீஷாம்
ஸ்யாத் பாதகம் ததபி ஹந்த்யுருகாயவாத:||
(ஸ்ரீமத் பாகவதம் 6:3:26)

மரணப்படுக்கையில் தன் மகனை நாராயணா என்று அழைத்தபோதும், விஷ்ணு தூதர்கள் ஓடிவந்து  அஜாமிளனின் உயிரை  விடுவித்தனர். அடாத பாவச்செயல்கள் புரிந்த அஜாமிளனை விஷ்ணுதூதர்கள் விடுவித்ததின் காரணம் புரியாமல் யமதூதர்கள்  தங்கள் தலைவனான யமராஜனிடம் கேட்டனர். ஜீவன்களை சரீரத்திலிருந்து விடுவித்து அவர்களது பாவ புண்யங்களை ஆராய்ந்து தக்க பலனை வழங்கும் பதவியிலிருக்கும் யமராஜன் அவர்களுக்குச் சொன்ன பதிலிலிருந்து..

மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களாலும் பகவான்  ஹரியினடத்தில் பக்தி செய்பவர்கள் புத்திமான்களாக அறியப்படுகிறார்கள். அவர்களிடம் பாவம் இருந்தாலும் அது அவர்கள் செய்யும் நாராயண ஸங்கீர்த்தனத்தினாலேயே அழிந்து விடுகிறது. பகவானான  ஹரியைத் தலைவனாகக் கொண்ட அவர்கள் நான் அளிக்கும் தண்டனைக்குத் தகுதி வாய்ந்தவர்களல்லர். அதனால் இந்த லோகத்திற்கும் அவர்கள் வரவேண்டியதில்லை..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37