ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (22)

चिंतामणिर्लॊकसुकं  सुरद्रुः स्वर्गसंपदम् ।
प्रयच्छित गुरुः प्रीतॊ  वैकुण्ठं यॊगिदुर्लभम् ।।

சிந்தாமணிர் லோகஸுகம்‌ ஸுரத்ரு: ஸ்வர்க ஸம்பதம்|
ப்ரயச்சதி குரு: ப்ரீதோ வைகுண்டம்‌ யோகி துர்லபம் ||
(ஸ்ரீமத் பாகவத மாஹாத்ம்யம் 1:8)

தேவர்கள் உலகில் விளங்குவது  சிந்தாமணி. இம்மணியை வைத்திருப்பவர்கள் இம்மண்ணுலகில் எல்லைக்குள் இருக்கும் எப்பொருளை விரும்பினாலும் உடனே  பெற்றுத்தரும்.

கற்பகத் தரு என்னும் மரமும் தேவர்களின் உலகில்‌ இருப்பதேயாகும். இம்மரத்தின் அடியில் நின்றுகொண்டு தேவர்கள் உலகம் வரை உள்ள எப்பொருளை விரும்பினாலும் உடனே பெற்றுத்தரும்.

 இவ்விரண்டும் செயல்படுவதற்கு எல்லை உண்டு.

 ஆனால்,  சிறிய சேவையே ஆனாலும், அதனால்  குரு மகிழ்வாரேயானால், யோகிகளும் அடைவதற்கு மிகுந்த சிரமப்படுவதானால் அந்த வைகுண்டத்தையே பெற்றுத் தந்து விடுவார்.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37