ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (5)
தர்ஶனம் நோ தித்ருக்ஷூணாம் தேஹி பாகவதார்ச்சிதம்|
ரூபம் ப்ரியதமம் ஸ்வாநாம் ஸர்வேந்த்ரிய குணாஞ்ஜனம்||
( ஸ்ரீமத் பாகவதம் 4:24:44)
ப்ராசீன பர்ஹிஸ் என்பவரின் புதல்வர்களுள் பதின்மர் ப்ரசேதஸர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். பூமியில் ஸ்ருஷ்டியை ஏற்படுத்துவதற்காகக் கிளம்பிய அவர்களுக்கு ஸ்ரீ ருத்ரன் தரிசனம் கொடுத்து, ஸ்ரீ ஹரியின் பெருமைகளையும், அவரை அடையும் மார்கத்தையும் உபதேசம் செய்தார். அதிலிருந்து ஒரு ரத்தினம் இதோ :
ஹே பகவன்!
தங்களது திருவுருவம் அடியார்களுக்கு மிகவும் ப்ரியமானது. எல்லா இந்திரியங்களுக்கும் நன்மை பயக்கும் மருந்து போன்றது. பக்தர்களால் விரும்பி வணங்கத்தக்க தங்கள் திருவுருவத்தை எமக்குக் காட்டுங்கள்..
Comments
Post a Comment