ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (16)
இந்திரனுடன் வ்ருத்திராசுரன் சண்டையிடும்போது பகவானைத் துதித்த ஸ்துதியிலிருந்து..
अहं हरे तव पादैकमूल
दासानुदासॊ भवितास्मि भूयः ।
मनः स्मरेतासुपतेर्गुणांस्ते
गृणीत वाक्कर्म करॊतु कायः।।
அஹம் ஹரே தவ பாதைகமூல
தாஸாநுதாஸோ பவிதாஸ்மி பூய:|
மன: ஸ்மரேதாஸுபதோ குணாம்ஸ்தே
க்ருணீத வாக்கர்ம கரோது காய:||
(ஸ்ரீமத் பாகவதம் 6:11:24)
ஸ்ரீமன் நாராயணா! உம்முடைய திருவடிகளையே முக்கியமான ஆஷ்ரயமாகக் கொண்ட பக்தர்களைப் பின்பற்றும் தாஸனாக எப்போதும் இருக்கப்போகிறேன். ப்ராணநாதனாகிய உமது குணங்களை மனது எப்போதும் தியானிக்க வேண்டும். வாக்காகிய இந்திரியம் உமது குணங்களையே துதிக்கவேண்டும். உடம்பு விதிக்கப்பட்ட வேலைகளைச் செய்யட்டும்.
Thanks to Subashree Venkatraman for the audio
https://drive.google.com/file/d/1fn31MFKZ4cQVQJrzPbJwp6GM8c5q96FI/view?usp=drivesdk
Comments
Post a Comment