மனம் கேட்பதனைத்தையும்
மிகவும் சிரமப்பட்டு
ஓய்வொழிச்சல் இன்றி
எங்கெங்கோ அலைந்து
எப்படியோ தேடி கொடுத்துக்கொண்டே இருந்தேன்.
ஆச்சரியம்..
கொடுப்பனைத்தும்
கணநேரத்தில்
காணாமல் போயிற்று..
உள்ளே வந்து பார்த்தால்தான் தெரிகிறது..
மலையப்பனான நீ
அனைத்தையும் விழுங்கிக்கொண்டிருக்கிறாய்..
Comments
Post a Comment