இனிதான இசை எந்தன் செவியேறுமோ

நான் இங்கு நீயாகும் நாள் வருமோ
மாயை தன் பிடி என்று எனை விடுமோ
மயக்கும் உன் புகழில் என் மனம் மாயுமோ
உன் பெயரே எனதென்று வழக்காகுமோ
உயிர் உருகி உன் கழலைத் தழுவிடுமோ
செயல் எல்லாம் உனதாக மாறிடுமோ
செலவின்றி சிந்தை என்று அடங்கிடுமோ
Image courtesy: Kanha



Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37