நீ இங்கேதான்
இருக்கிறாய்..
தென்றல் சுமந்து வரும்
துளஸியும் மகிழம்பூவும்
கலந்த நறுமணம்..
நேற்று வாடத்துவங்கியிருந்த புற்கள்
பசுமை போர்த்தி
இன்று
நிமிர்ந்து நிற்கின்றன..
யமுனையின் துள்ளல்
நேற்றைவிட அதிகமாய்..
மரக்கிளைகள்
நீ தடவிச்செல்ல வாகாய்த்
தழைந்திருக்கின்றன..
இம்மலர்கள்
வழக்கத்தை விடச்
சற்று பெரியதாய்..
நீ இங்கேதான் இருக்கிறாய்..
எனக்குத் தெரியும்..
என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்
என்பதும் தெரியும்.
எனக்கது போதும்..
நான் உன்னைப் பார்க்காவிடில் என்?
Comments
Post a Comment