கனவில் வந்த முகம்
மறந்துபோயிருந்தாலும்,
விழிக்கும்போது எழும் புன்னகைக்குக்
காரணம்
கனவில் கேட்ட
உன் குழலிசைதான்.
சொல்லத் தெரியாமல்
கனக்கும் மனம்
சட்டென்று ஒரு கணத்தில் லேசாவதின் காரணம்
உன் மனத்தில்
ஒரு கணம் எழுந்த
என் நினைவுதான்.
அலையலையாய் எழும்
எண்ணக் குவியல்களின் நடுவில்
சட்டென்று மனம் சிந்தனையற்று நிற்பதன் காரணம்
உன் மயிலிறகசைவுதான்.
Comments
Post a Comment