நாமச்சுவை..(9)

உன் பெயரைச்
சொல்வது இனிதா.
கேட்பது இனிதா..

நாவிற்கும், செவிக்கும் 
பட்டிமன்றம் நடக்கிறது..

நடுவரான இதயமோ
இரண்டுமே இனிதென்று
நடுநிலையாய்த் 
தீர்ப்பு சொல்லிவிட்டது..

நாவாரப் பாடி
செவியாரக் கேட்பதே இனிமை..

 

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1