நாமச்சுவை .. (6)

நினைந்து நினைந்து 
உருகுபவர் 
ஆயிரவர்..

வழி நோக்கிக்
காத்திருப்பவர்  பல்லாயிரவர்..

அனைவரும் இருக்க..

நீயோ..

பேச்சுவாக்கில் 
உன் பெயர் சொன்ன என்னிடம்

என்னை அழைத்தால் வருவேன் 
என்று
நேரில் வந்து
 சொல்லிப்போகிறாய்..

இது
என்ன வகையான
கருணை?

Comments