க்ருஷ்ணமாதுரி - 13


பத்தடிக் குடிலில்
புதுவெள்ளம் புகுந்தாற்போலாயிற்று..
தலை சுற்றுகிறது
சுவாசிக்க இடமில்லை.
பசியுமில்லை..
நாளங்கள ஒட்டிப்போனதால் உதிரம் ஓடுவதில்லை..
நிற்பது
அமர்வது
நடப்பது
ஏன்
படுப்பதுகூட இயலவில்லை..
அண்டம் தாங்கும்
உன்னை
அகத்தில் சுமப்பது
அவ்வளவு சுலபமில்லை..
என்னையும் நீயே தாங்கிக்கொள்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37