க்ருஷ்ணமாதுரி - 5

பற்றை விடவேண்டுமாம்
உனையடைய..

எப்படி விடுவது?

அன்றொருநாள்
நீ பற்றிய 
கரத்தைச் சுமக்கும்
உடலையும்
உன் எண்ணங்களையும்
பற்றிக்கொண்டு

ஏதோ வாழ்ந்துவிட்டுப்போகிறேன்..

நீயெனை
முழுதாய்ப் பற்றும் வரை..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37