க்ருஷ்ணமாதுரி - 4

அடிவயிற்றிலிருந்து 
நெஞ்சைக் கடந்து நாசியை அடைவதற்குள்
நிகழும் போராட்டம்
மாபாரதப்போரைவிடப் பெரியது..

உள்நுழைவதோ இன்னும் கடினம்..

நரம்புகளை நீவிவிட்டுக் கொண்டு
நேற்று உள்நுழைந்த 
நளினகாந்தி
விடுபட்டுச் செல்லும்போது
அவற்றைச்  
சிக்கலாக்கிச் சென்று விட்டது.

இன்றைக்கு
விரலிசைக்கும் குழலிசையால் ஆவதொன்றுமில்லை..

சிக்கல் தீர்க்க
குழலிசைக்கும் 
விரல் வேண்டும்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37