க்ருஷ்ணமாதுரி - 20

உன் அன்பு என்ன செய்யும்?

குழந்தை முதல் 
கிழவி வரை
 அனைவரையும் 
அழகாய்க் காட்டும்..

வறியவர் முதல் 
இறைவன் வரை 
அனைவர்க்கும் வழங்கச்  செய்யும்..

கானா முதல் 
கர்நாடக இசை வரை
அனைத்தும் நாவில் விளையாடும்..

காதில் விழும் 
அத்தனை சொற்களையும்
உன் பெயராய் 
ஒலிக்க வைக்கும்..

நீ வருவதற்கு வாய்ப்பில்லை என்று நன்கறிந்த பின்னும்,
நப்பாசையால் நொடிக்கொருமுறை தேடும்..

வேம்பைச் சமைத்தாலும் தேனாய் இனிக்கும்..

என்னை 
எனக்கே
கண்டுபிடித்துத் தரும்..

நீ நான் 
என்ற வித்யாசத்தை அறவே ஒழிக்கும்...

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1