க்ருஷ்ணமாதுரி - 19

அன்பின் ஆதவனான
உன் வெளிச்சத்தில்தான்
அகிலமே இயங்குகிறது..

அதன் ஒளி 
கண்ணைக் கூசுவதால்
விழிகளை மூடிக்கொண்டு
இருள் இருள் 
என்று
கதறிக்கொண்டிருக்கிறேன்..

என்
விழிவாசல் திறக்க
நிலவாய் 
வரவேண்டும் நீ..

அதுவரை
உன் மயில்பீலிக்குள்
முகம் புதைத்திருப்பேன்...

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1