க்ருஷ்ணமாதுரி - 62



வாழ்ந்தாலும்
காய்ந்து வீழ்ந்தாலும்
உன் மீதே..
என் விழுதுகள்
அனைத்தும்
ஆதாரமான
உனை நோக்கியே..
என்றேனும் ஒருநாள்
நிச்சயம் தொடுவேன்
உனை..
அதற்குள்
ஒரே ஒருமுறையேனும்
வந்து
ஊஞ்சலாடிவிட்டுப் போயேன்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37