க்ருஷ்ணமாதுரி - 61



நேற்றிரவு
கேட்ட குழலிசையின்
விளைவால்
மனமசைந்து
உடலசைவற்று
மரமாய்ச்
சமைந்து நிற்கிறேன்.
கண்ணசைவோ
இதழசைவோ
பயனில்லை..
என்னை
உன்
குழலாக்கிக்கொள்.
விரலசைத்து
என்
உயிர்மிசை ஏகு..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1