க்ருஷ்ணமாதுரி - 106


கேலியும் கண்ஜாடையும்
தனக்காகவென்று
எண்ணியது
பேதை மனம்.
உற்று நோக்கியபின்
புரிந்தது
அது
பொதுச்சொத்தென்று..
ஈடுபட்ட மனமது
பாடுபட்டு அலையும்போது
பற்றிக்கொண்டது
உன் பனிப்பெயர்!
பெயரொன்றே துணையென்று
தனிப்பயணம் துவங்கிவிட்டேன்..
பின்னர்தான்
தெரிந்து கொண்டேன்..
பெயரெனக்குத் துணையன்று!
அதுதான்
என்னை
அழைத்துச் செல்கிறதென்று..

Previous  Home  Next

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37