க்ருஷ்ணமாதுரி - 1

கண்மூடி
நதிக்கரையில்
அமர்ந்திருக்கின்றேன்.

நதியின் சலசலப்பு
உன் நூபுரமாய் இசைக்கிறது..

தடவிப்போகும் தென்றலில்
என் தோட்டத்து
மகிழம்பூவின் வாசம்..

என் கண்களை நீ திருடிக்கொண்டாய்
அவற்றின் வேலையைக்
காதுகள் செய்கின்றன..

திடீரென்று 
கன்னத்தில் ஈரம்..
பறந்துவந்து
கன்னம் தொட்டுப் போகிறது மயில்பீலி..

உன் குழலிசைக்காகவே 
காத்திருக்கிறேன்.
வந்ததும் அதிலேறி
உன்னிடம் வருவேன்..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1