க்ருஷ்ணமாதுரி - 69


ஒவ்வொரு இதழாய்ப்
பொறுமையாய்
விரித்து
சட்டென்று மலரும் மலராய்
மணம் பரப்புகிறாய்..
நேரம் ஆக ஆக
பழகிப் போனது
உன் வாசம்...
காற்றாய் நின்று
சுவாசிக்கிறேன் உன்னை..
எவ்வளவு வீசினாலும்
அசையா நிற்கிறது
உன் மயில்பீலி..
காலையானதும்
வந்துவிடுவாய்
என்றெண்ணி
உன்னைக்
கனவில் தேடிக்கொண்டிருக்கிறேன்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37