க்ருஷ்ணமாதுரி - 70


பாலாழியைச்
சுண்டக் காய்ச்சி
சுண்டைக்காய் அளவில் ஆக்கினாற்போல்..
விரிந்து பரந்த
உன் இனிமை
அனைத்தும்
உருண்டு திரண்டு
என் விரலிடுக்கில்
வந்ததோ..
இவ்வுருவிலேயே
என்
உளத்தின்
ஒவ்வொரு
அங்குலத்திலும்
நிறை..
உன்
தீஞ்சுவையால்
என் இதயஆழி
நிரம்பட்டும்..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1