க்ருஷ்ணமாதுரி - 35

ஆறு பேசுகிறது
காற்று பேசுகிறது
வானம்
 மரம்
மலர்
பறவை
 எல்லாம் பேசுகிறது

என்று 
ஒவ்வொன்றின் பின்னாலும் சென்று 
உற்று உற்றுக் கேட்டு
பக்கம் பக்கமாய் 
உளறிக்கொட்டி
கிளறி மூடிக்கொண்டிருந்தேன்.

மடப்பெண்ணே..
வெளியில் என்ன தேடுகிறாய்?
நான் இங்கிருக்கிறேன் என்பதாய்..

களுக்கென்று
 நீ
சிரிக்கும் சத்தம் 
உள்ளிருந்து 
துல்லியமாய்க் கேட்கிறது...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37