க்ருஷ்ணமாதுரி - 34

தேடி தேடி
சொற்களைக் கோத்து
உனக்கான ஒரு மடல் 
எழுதிவிட்டேன்..

எப்படி அனுப்புவது?

முகவரி?

பாற்கடல்? 
தபால்துறையின் எல்லைக்குள் இல்லை..

த்வாரகை? 
அது கடலுக்குள்..

ப்ருந்தாவனம்? 
முழுவதுமாய் நிரம்பி இருக்கிறாய்..
கண்டுபிடிப்பது கடினம்

இதோ சரியான முகவரி..

கண்ணன்,
என் மனம்
என் பெயர்...

Comments