க்ருஷ்ணமாதுரி - 33

குடையாய் நின்று
அண்டியவரைக் காக்கும் பொருட்டு
வளைந்த 
உன் பாதத்தின் 
நடுப்பகுதி
தரையில் படாதாம்..

அவ்விடத்து மண்துகள்கள் ஏங்கிப்போகின்றனவாம்..

நீ
தேய்த்து நடப்பதன் காரணம் 
இன்றுதான்
புரிந்தது...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37