க்ருஷ்ணமாதுரி- 37

ஒரு கட்டையில்
ஒரே மாதிரி 
ரீங்கரிக்கிறது
இந்த வண்டு...
ஓ..
உன் குழலிசைக்கு
ஸ்ருதி சேர்க்கிறதோ..

சலசலவென்ற
யமுனையின் 
பக்க வாத்யமும் 
தயார்..

சேர்ந்திசைக்கு
குயிலும் தயார்..

மயங்குவதற்கு
மூவுலக ஜீவராசிகளும் வந்தாயிற்று.

உன் இடுப்பெனும் 
பஞ்சு மெத்தையில்
உறங்கியது போதும்..

அந்தக் குழலை
எழுப்பிக் 
கச்சேரியைத் துவங்கு...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37