க்ருஷ்ணமாதுரி - 99


தாமரைக் கரங்களில்
பூத்த
முல்லைப்பூ விரல்களால்
ஏழிசை தொடுக்கிறாய்..
மயக்கும் மலர்வனமாய்
என்
மனவனத்தில் நடக்கிறாய்
என்
சொல்லும் செயலும்
உனைச் சேர்வதாலேயே
பொருள் கொள்கின்றன.
இதோ..
நானும்
யாத்த கவிதைகளும்
உன் தளிர்ப்பதத்தடியில் குப்பையாய்..
ஏற்பதும் விடுப்பதும்
நின் செயல்..
--------
க்ருஷ்ணார்ப்பணம்..
பிறகு வரும்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37