க்ருஷ்ணமாதுரி - 100


உன்னோடு
எனக்குள்ளாகவே
நான்
பேசிய பேச்சுக்களின் பேரிரைச்சலில்
காதுகள் செவிடாகிவிட்டன..

மனதோ ஊமையாகிப்போனது.

இரைச்சல்களினூடே கேட்கும்
உன்
மெல்லிய குழலோசை
நரம்புகளால்
உடலைச் சிறையிடுகிறது..

வடதிசை நோக்கும்
காந்தமுள்ளாய்
புலன்களனைத்தும்
உன்னை நோக்கியவாறு...

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

ப்ருந்தாவனமே உன் மனமே - 37

உறங்கும் முன்... - 1