க்ருஷ்ணமாதுரி - 74


நேற்றிரவு
கனவில் கண்ட
உன் முகம்...
விழித்ததும்
நினைவில் இல்லை..
எவ்வளவு முயன்றும்
அடையாளங்கள் மட்டுமே கண்முன்னால்..
கனத்த மனத்துடன்
முகம் கழுவி
ஆடியில் பார்க்க..
ஓ..
இங்கே இருக்கிறது!
நெஞ்சம் கனப்பதன்
காரணம்
புரிந்தாற்போலிருக்கிறது..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37