க்ருஷ்ணமாதுரி - 51



வீட்டுச் சாவி
சில்லறை
கொஞ்சம் பணமும்
என்றோ பயணித்த பேருந்துச்சீட்டு
கோவிலில் கொடுக்கப்பட்ட
ப்ரசாதப்பூக்களின் காய்ந்த இதழ்கள்
பண அட்டைகள்
சில முகவரி அட்டைகளும்
இரண்டு மஞ்சள் கிழங்குகள்
பேனா
ஒரு சீப்பு
ஒரு சிறிய குங்கும டப்பா
ஒரு கறுப்புக்குடை
சிறிய நீர்க்குப்பி
அலைபேசி
இவற்றின் நடுவே
தனக்கும்
ஒரு இடம் பிடித்துக்கொள்கிறது
உன் சின்னஞ்சிறு படம்..
என்‌ மனத்திற்கும்
கைப்பைக்கும்
இடையே
பெரிய வித்தியாசம் ஏதுமில்லை..
ஹ்ம்ம்..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37