க்ருஷ்ணமாதுரி - 50



வராகமாய் வந்தபோது
தெற்றுப்பல்லில் வைத்து
பூமிப்பந்தைச் சுழற்றினாய்..
வாமனனாய் வந்து
பின்
வளர்ந்து நின்றபோது
பூமி சுழன்றது உன் காலுக்கடியில்.
கோகுலம்‌ காக்க
ஒரு விரலில் வைத்துச் சுழற்றுகிறாய்
மலையை..
கோள் பந்துகள் அனைத்தும்
உன் ஓரப்பார்வைக்கே
பயந்து
ஒழுங்காய்ச் சுழல்கின்றன..
பெரிய
சுழற்பந்தாட்டக்காரனடா நீ..

Comments