க்ருஷ்ணமாதுரி - 48



ஒவ்வொரு நாளும்
அதிகாலையில்
உறக்கம் நீங்கி எழும்போது..
அன்னை விழித்தால்
தானும் விழித்துக்கொள்ளும்
கைப்பிள்ளை போல்..
என்னோடு சேர்ந்து
எழும்
நீலவண்ணன் பற்றிய
சின்னஞ்சிறு சிந்தனை..
என்னை
விடாமல்
பற்றிக்கொண்டு
அன்றைய
நாளை
நிர்மலமாக்கி
நளினமாக்குகிறது.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37