க்ருஷ்ணமாதுரி - 31

இடுப்புத் தழும்பை
மறைத்து
லாவகமாய் அமர்ந்திருக்கும்
குழலை
இரு விரல்களால் உருவி
முழுவதும் தடவிக் கொடுத்து
பட்டும் படாமலும்
 பூவிதழில் வைத்து
 நீ 
ஸ்ருதி சேர்க்கும்போது,

உன் பட்டு விரல்கள்
பட்டுச் சிலிர்த்து
செல்லமாய்ச் சிணுங்கும் 
ஒரு மாத்திரை ஒலி, 
என் நாளை நிறுத்திவிடுகிறது...

Comments