க்ருஷ்ணமாதுரி - 80


அடியாரின் துன்பங்களை
'அரி'ந்தெடுக்கும்
பெயர்..
என்னை
இவ்வுலகினின்று
முழுதுமாய்
'அரி'த்தெடுக்கும் பெயர்..
பொய்யா மொழியான
'அரி' எனும்
உன் பெயர்..
அதுவே
போதும் எனக்கு..
இப்பொய்யுலகில்
ஓர் ஓரமாய்ப்
பிழைத்துக் கிடப்பேன்
உனை அடையும்வரை..

Comments