உறங்கும் முன்... - 1
திருட்டுப்பையனின் வெகுளித்தனம்.. கோடி வீட்டு கோபி வைத்துவிட்டுப்போன பானைகள் அனைத்தும் கபளீகரம்செய்தாயிற்று. எப்படியோ யசோதா கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பட்டு மஞ்சத்தில் வந்து உறங்குவதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருக்கும் கண்ணனைப் பார்த்து யசோதைக்கு ஒருபுறம் பாவமாக இருந்தாலும், இன்னொரு புறம் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. தன்னை மீறி கலகலவென்று சிரிக்க, அம்மா சிரிப்பதைப் பார்த்து அதற்கு மேல் நடிக்க முடியாமல் கள்ளக் கண்ணனும் சிரித்துவிட்டான். அவ்வளவுதான், சிரிப்பை மறந்துவிட்டுப் பாலை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள் யசோதை. தொப்பை நிறைய வெண்ணையும் பாலும் விழுங்கிப் போதாக்குறைக்கு குரங்குக்கும் ஊட்டி விட்டாயிற்று. மதியம் பருப்புசாதத்தை ஏமாற்றி ஊட்டி விட்டாள். இப்பொழுது பால். எப்படிக் குடிப்பது? ஆரம்பித்தான், அம்மா அதான் சமத்தா பருப்பு சாதம் சாப்பிட்டேனே. பால் வேறு குடிக்கணுமா? ஆமாண்டா கண்ணா. நம்ம வீட்டு மாடெல்லாம் உனக்காகத்தான் கறக்கறது. நீ குடிக்க வேண்டாமா? கன்னுக்குட்டிக்கு வேண்டாமா? கன்னுகுட்டியெல்லாம் குடிச்சாச்சுடா. என் சமத்துக் கன்னுக்குட்டி நீதான் இன்னும் பால் குடிக்கல. அம்மா
Comments
Post a Comment