நவ(நீத)ரஸகுண்டு.. (29)
இருள் சூழ்ந்த மயக்கும் மாலையில் கோகுல சந்திரனைக் காண வானத்துச் சந்திரன் வந்தான். யசோதா கண்ணனை இடுப்பில் வைத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தாள். அம்மாவும் பிள்ளையும் நக்ஷத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கையில்..
அம்மா..
ம்ம்..
அது என்ன?
அது நிலாடா.. சந்தா மாமா.
மாமாவா..
ம்ம்
உருண்டையா வெண்ணெய் மாதிரி இருக்கே..
வெண்ணெயெல்லாம் இல்ல.. அம்புலி மாமா. சந்தா மாமான்னு சொல்வோம்.
அது எப்படி மாமாவாகும்?
கண்ணா... இந்த உலகம் முழுசுக்கும் அம்மா மஹாலக்ஷ்மி.. அவங்க பாற்கடல்லேர்ந்து வந்தாங்க..
பாற்கடல்னா..
நிறைய பால் இருக்கும்டா..
அம்மா..
ம்ம்..
என்னை அங்க கூட்டிண்டு போயேன்..
அதெல்லாம் அப்றமா போலாம்..
சரி..அதுக்கும் சந்தா மாமாக்கும் என்ன சம்பந்தம்?
அதே பாற்கடல்லேர்ந்து இந்த நிலாவும் வந்தது.
ம்ம்..
அம்மாவோட சகோதரன் மாமா தானே.. அதனால் சந்தா மாமா ன்னு சொல்றோம்.
அம்மா..
ம்ம்..
பால்லேர்ந்து வெண்ணெய்தானே வரும். நீ கடையும்போது நான் பாத்திருக்கேனே..
மாமா வந்தாருங்கற... அது வெண்ணெய்தாம்மா..
கண்ணா.. நீ வா நாம உள்ள போலாம்..
Comments
Post a Comment