நவ(நீத)ரஸகுண்டு.. (39)
கண்ணனின் குட்டிக் கால்களுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டே கேட்டாள் யசோதை..
கண்ணா, அவ்ளோ பெரிய உரலை எப்படி இழுத்துண்டு போன? மரமெல்லாம் உடைஞ்சு விழுந்துடுச்சே..
அம்மா..
நீங்க ஏம்மா அதில் கட்டினீங்க?
நியாபகம் வந்ததும் உதட்டைக் கடித்து அழத்துவங்கினான் கள்ளன்.
ச்சோ..ச்சோ..
சரி சரி.. அம்மா தப்பு போட்டுக்கறேன்.. இனிமே கட்டமாட்டேன். நீ சொல்லு அந்த உரலை எப்படி இழுத்துண்டு போன?
நான் எங்க இழுத்துண்டுபோனேன்? அது உடைஞ்சுபோன உரல். டம்னு விழுந்த வேகத்தில் உருள ஆரம்பிச்சுது. என்மேல் ஏறிடப்போறதேன்னு பயந்துபோய் குடுகுடுன்னு தவழ்ந்து வேகமா போனா.. அதுவும் பின்னாடியே வருது.
மரம் ஏற்கனவே ரொம்ப நாளத்து மரம். உரல் லேசா இடிச்சது. அப்ப நல்லா காத்தடிச்சதும் விழுந்துடுச்சு. நான் ஒன்னுமே பண்ணலம்மா.. நம்புங்கம்மா..
அதுசரி. மரத்திலேர்ந்து ரெண்டு பேர்..
அம்மா.. நீங்க ரொம்ப நேரமா எண்ணெயைவே தேச்சுண்டு... எனக்கு பசிக்கறது... வெண்ணெய் குடுங்க..
இதோ ஆச்சுடா..
என்று கேட்ட கேள்வியை மறந்து வேகமாய் மேல் நீரை ஊற்ற ஆரம்பித்தாள் யசோதை.
Comments
Post a Comment