நவ(நீத)ரஸகுண்டு.. (42)

எப்பப் பார்த்தாலும்
வெண்ணெய் வெண்ணெய்தானா கண்ணா?
பசிச்சாக்கூட மம்மு கேக்காம வெண்ணெய் கேக்கறயே..

வெண்ணெய் ரொம்ப பிடிக்கறது மா..

அதுசரி டா..
அதுக்காக எப்பவுமே வெண்ணெய்யா..
அது ஏன் அவ்ளோ பிடிக்கறது?

வெண்ணெய் எதிலேர்ந்து மா வருது?

பால்லேர்ந்து..

எப்படி எடுப்பீங்க..

பாலக் காய்ச்சி, உறை குத்தினா தயிராகும். அப்றம் அதைக் கடைஞ்சா வெண்ணெய் வரும். நீதான் பாக்கறயே தினமும்.

ஆமாம்மா..
பால் கொதிச்சு, அப்றம் தயிரா மாறி கடையும்போது பானைக்குள்ள சுழண்டு சுழண்டு எவ்ளோ கஷ்டப்பட்டு, ஸாரமா வெண்ணெய் குடுக்கறது. 
 அதுவும் என் பேரைச் சொல்லிண்டே வேற கடையறீங்க..

வெண்ணெய் வெள்ளேர்னு சுத்தமா இருக்கு..
தளதளன்னு வளைஞ்சு குடுக்கறது. பளபளன்னு இருக்கு. தொட்டா அப்டியே ஒட்டிக்கறது. வாயில் போட்டா கரைஞ்சு உள்ள போயிடறது. 
பால் அவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ அருமையான வெண்ணெய் குடுக்கும்போது அதை நான் சாப்பிடாட்டா அதைக் கறந்த மாடும் சரி, பாலும் சரி, வருத்தப்படும் மா..

அம்மா.. ஒரு ரகசியம் சொல்லவா..

என்னடா..

இந்த வெண்ணெய் மாதிரி உருகற மனசுள்ளவாளையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

போடா.. நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு சொல்ற..
ஒன்னும் புரியல.
மாடு மேய்க்கற பசங்களோட சேர்ந்து சேர்ந்து உனக்கும் சரியா பேசத் தெரியல..
 உன்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாதது தப்பாச்சு. 

அம்மா.. அம்மா..
இனிமே நீங்க எது கேட்டாலும் டாண் டாண்ணு பதில் சொல்றேம்மா..
பள்ளிக்கூடம் மட்டும் வேணாம்மா..

என்று உதட்டைப் பிதுக்கிய கண்ணனைப் பார்த்துச் சிரித்த யசோதை
போ விளையாடு போ..
என்றதும் சிட்டாய்ப் பறந்தான் நம் 

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37