நவ(நீத)ரஸகுண்டு..(19)
அந்தப் பழக்காரப் பாட்டி கூடைல நீ போட்ட தானியம் எப்படிடா நவரத்தினமா மாறித்து? கொஞ்சம் சொல்லேன்..
யசோதை மேல் உட்கார்ந்து ஆனை ஆடி க் கொண்டிருந்த கண்ணன் யோசிக்காமல் சொன்னான்.
அம்மா, அவங்க தன் கிட்ட இருந்த எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்துட்டாங்க மா. அவங்களுக்குன்னு எதுவுமே வெச்சுக்கல. ஆனா, நான் என்கிட்ட இருந்த தானியத்துல கொஞ்சம்தாம்மா குடுத்தேன். அவங்க அதுக்கே சந்தோஷப்பட்டாங்க..
அவங்க மனசு ரத்தினமாட்டம் இருந்ததா..
கூடையிலயும் ரத்தினம் வந்துடுச்சு. நான் எதுவுமே பண்ணலம்மா..
நம்பும்மா..
என்றவனைக் கொஞ்சி ஒரு உருண்டை வெண்ணெய் கொடுத்தாள் யசோதை..
Comments
Post a Comment